May 28, 2012

இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா 2012

கடந்த மே திங்கள் 27-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று, பினாங்கு மாநில அளவிலான 2012-ஆம் ஆண்டின் இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் வெகுவிமரிசையாக நடத்தப்பட்டது. மேலும் படிக்க : http://cj.my/post/65809/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF/

Apr 15, 2012

மலேசியாவில் பணிப்புரிய தையல்காரர் தேவை!



அன்பர்களே, தற்சமயம் மலேசியாவில் இயங்கிவரும் எங்கள் தையல் கடைக்கு தமிழ்நாட்டிலிருந்து அனுபவமுள்ள தையல்காரர்கள் தேவைப்படுகிறார்கள். தையல் துறையில் குறைந்தது 4-5 வருட அனுபவமுள்ளவர்களாகவும் பலவகையான இந்தியர்கள் அணியக்கூடிய ஆடைகளை நெய்யக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும்.

பணி தொடங்கி ஒரு மாத காலம் மலேசியத் தமிழர்களுக்கு ஏற்றவகையில் துணிகள் தைப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்படும். தங்குவதற்கு தனி வீடும் தினசரி மூன்று வேலை உணவும் வழங்கப்படும். மாதம் ரிங்கிட் மலேசியா 1000 வெள்ளி ஊதியம் வழங்கப்படும். வருடத்திற்கொருமுறை போனசும் உண்டு. விருப்பமுள்ள ஆண்/பெண் தையல்காரர்கள் தொடர்புகொள்ள வேண்டிய எண் :- ராமன் +60177335117 மின்னஞ்சல் hurricane.vilakku@gmail.com

Aug 5, 2011

இந்திய மலேசியர்களின் தோட்டப்புற வாழ்க்கை... (நிழற்படங்கள்)

பினாங்கு மாநிலத்தில் 200 வருட கால வரலாற்றைக் கொண்ட பத்து கவான் தோட்டத்திற்கு அண்மையில் சென்றிருந்தபோது அங்கு வசிக்கும் இந்திய மலேசியர்களின் வாழ்க்கைச் சூழல்களை நிழற்படங்களாக எடுத்து இங்கு தந்துள்ளேன். இந்நிழற்படங்கள் நிக்கோன் டி3100-ல் எடுக்கப்பட்டு ஃபோட்டோசாப்பில் மெருகேற்றப்பட்டுள்ளது.

இது என் முதல் முயற்சியாகும்.



























Sep 11, 2008

வெள்ளைப் பூக்கள்...

அண்மையில் நான் சென்ற சில தமிழ்ப் பள்ளிகளில் சிட்டுகள் செய்யும் குறும்புத்தனங்களை என் கைப்பேசியின் வழி படம் பிடித்தேன்.

மாசற்ற வெள்ளைப் பூக்களின் பூத்துக் குலுங்கும் குதூகலமும், தொட்டாற்சிணுங்கிக்கீடான வெட்கமும், குரங்கின் சேஷ்டையும், ஊசிக்கு பயந்து அலறுவதுமாய் பல்வேறு முகபாவங்களுடன் சில சிட்டுகளின் படங்கள் உங்கள் பார்வைக்காக...

"கத்துனா குத்துவேன்... ;)"



"ஆஹா... விடிஞ்சுருச்சாப்பா...?"


"என்ன லுக்கு..?"


"வடை போச்சே..."


"என் பல்ல பாருங்க... அழகா இருக்கா..."


"நான்தான் பல்லழகி, எனக்கே பரிசு கொடுங்க.."


"எனக்கு வெக்கமா இருக்கு.."

Aug 5, 2008

விழிப்படலங்கள் - அறிமுகம்

அனைவருக்கும் வணக்கம்,


பத்து மாதங்களுக்கு முன்பு Canon PowerShot A430 4.0 Mega Pixels நிழற்படக்கருவியை மறுவிற்பனையில் மலேசிய ரிங்கிட் 180 வெள்ளிக்கு வாங்கினேன். இதுவே நான் வாங்கிய முதல் டிஜிட்டல் நிழற்படக் கருவி. அச்சமயம் 10 Mega Pixels நிழற்படக்கருவிகள் சந்தையில் வந்துவிட்டாலும், அப்போதைய சூழ்நிலையில் என்னால் 4.0 Mega Pixels நிழற்படக்கருவியை, அதுவும் மறுவிற்பனையில் இருந்ததைத்தான் வாங்க முடிந்தது. ஆரம்பத்தில், முக்கிய நிகழ்வுகளைப் பதிவு செய்வதற்காகவே இந்நிழற்படக்கருவியைப் பயன்படுத்தி வந்தேன். பிக்னிக், சுற்றுலா, திருவிழா என ஒரு குறுகிய வட்டத்திற்குள் என் நிழற்படக்கருவியுடன் உலா வந்தேன்.


நாளாக நாளாக இயற்கைக் காட்சிகளைப் படம் பிடிப்பதில் நாட்டம் சென்றது. நான் புகைப்படக்கலையில் பெரிய நிபுணன் என்றெல்லாம் சொல்லி விடமுடியாது. ஏதோ கண்ணில் படும் இயற்கைக் காட்சிகளை என் நிழற்படக்கருவியில் பதிவு செய்துக் கொள்வேன். ஏழு மாதங்களுக்கு முன்பு Sony Ericsson k850i Cyber Shot 5.0 Mega pixels கைப்பேசியை வாங்கினேன். அக்கைப்பேசி பதிவு செய்யும் நிழற்படங்களும் நல்ல தரமானவையாக இருக்கின்றன. இக்கைப்பேசியில் பிடிக்கப்பட்டப் படங்களை GPRS வழி நேரே வலைத்தளத்தில் பதிவு செய்யும் வசதியும் (Mobile Blogging) உண்டு. இனிவரும் காலங்களில் நான் பிடித்த, பிடிக்கப்போகும் படங்களை உங்களுடன் பகிர்ந்துக் கொண்டு, குறை நிறைகளையும், சில நுணுக்கங்களையும் வாசகர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள ஆசைப்படுகிறேன். அதோடு இணையத்தில் எனக்கு அகப்படும் சிறந்த புகைப்படங்களையும் இவ்வலைத்தளத்தில் வெளியிடலாம் என நினைக்கிறேன்.

உங்களின் கருத்துகள் எனக்கு மிகப் பயனாக இருக்கும் என நம்பி, விடைப்பெறுகிறேன்.

வணக்கம்.

சித்தனின்.. ©Template Blogger Green by Dicas Blogger.

TOPO